“ஓம் ஐம் ரீம் வேல் காக்க” என்ற ஒரு வரி முருகன் மந்திரத்திற்கு சர்வ நாச கட்டுகளையும் உடைத்து முருகன் கையில் உள்ள வேல் காக்கும் என்பது பொருள்.
சிறிது விபூதியை எடுத்துக் கொண்டு வலது உள்ளங்கையில் வைத்து, இடது உள்ளங்கையை அதன் மீது வைத்து மூடி,
“ஓம் ஐம் ரீம் வேல் காக்க”
என்ற முருகன் மந்திரத்தை தினமும் 27 முறை உச்சரித்து பின்,அந்த விபூதியை 48 நாட்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வந்தால், கட்டிப் போடப்பட்டிருக்கும் குலதெய்வக்கட்டு உடையும்.
எதிரிகளால் செய்யப்படும் மாய மந்திர, ஏவல் பில்லி சூனியம் மற்றும் பணம், தொழில் முடக்கக்கட்டுகளும் உடையும்.
இந்த விபூதியை நீரில் கலந்து வீடுகளுக்கு தெளித்து வர வீட்டு தெய்வம் வாசலில் கட்டி போடப்பட்டிருந்தால் அந்தக் கட்டுகள் உடையும்.
வாகனங்கள் மீது தெளிக்க, அடிக்கடி விபத்துகளில் சிக்குபவர்களின் விபத்து கட்டும் உடையும்.
இந்த விபூதியை நீரில் கலந்து குளித்து வர கண் திருஷ்டி விலகும்.