குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.
2025 – 2026 குரு பெயர்ச்சியில் கன்னி ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
கன்னி 10 ல் குரு (2-4-6) ஆம் இடம் குரு பார்வை – சிக்கல், வேலை மாற்றம் பாதிப்புக்கு வாய்ப்பு உண்டு கவனம், எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும்.
கன்னி ராசிக்கான பலன்கள் :
- 10 ல் குரு (2-4-6) பார்வை பலன் – சிக்கல்.
- 10 ல் குரு பதவி வேலை மாற்றம்.
- வருமானம் பாதிக்காது சிறப்பாக இருக்கும்.
- வேலையில் மன அமைதி இருக்காது.
- குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும்.
- சொந்தங்களுடன் சமூக உறவு ஏற்படும்.
- எதிரிகள் அவர்களே சமாதானமகா வருவார்கள்.
- குடும்பத்தில் கஷ்டம் வாக்குவாதம் சரியாகும்.
- வியாபாரம் தொழில் வேலை நன்று.
- வாகன மாற்றம் உண்டு.
- துணையின் ஆரோக்கியம் மிக முக்கியம்.
- கணவன் மனைவி சண்டைக்கு வாய்ப்பு உண்டு.
- சிறு பிரச்சனை கூட பெரியதாகும்.
- குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடக்கூடாது.
- பிறர் குடும்ப விஷயத்திலும் நீங்கள் தலையிடக்கூடாது.
- பயணத்தில் மிக கவனம் தேவை.
- தவறான பழக்கம் உறவுகள் நண்பர்கள் வர வாய்ப்பு அதிகம் கவனம்.
- பகையான உறவுகள் விரோதமாக மாறும்.
- பழைய கடன் அடைப்படும்.
- வரவேண்டிய தொகை வரும்.
- தாயின் உடல் நிலை, சொத்து பிரச்சனை சரியாகும்.
- மாமியார், மருமகன் உடல்நிலையில் கவனம்.
- வெளியூர் வெளிநாடு படிப்பு யோகம் உண்டு.
- அரசியலில் எதிரிகள் தொல்லை விலகும்.
- அடகு நகைகளை மீட்கும் காலம்.
- வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதம் வேண்டாம்.
- பழைய நண்பர்கள் உறவுகள் ஒன்று கூடுவர்.
- குடும்பத்தை பிரிய வைக்கும் வேலைக்காக.
- பதவி மாறும் வருமானம் சேரும்.
- செல்வாக்கு சொல்வாக்கு உயரும்.
- எவரிடத்திலும் பேச்சில் குறை கண்டுபிடிக்க வேண்டாம்.
- எளிமையாக பழகிவிட்டால் மன நிம்மதி கிடைக்கும்.
- குழந்தைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம்.
- பணம் மிகுதி சந்தோசம் குறைவு.
கவனமாக இருக்க வேண்டிய பகுதி :
- சுவாச கோளாறு வரும்.
- அலர்ஜி பிரச்சனை வரும் கவனம்.
- காது மூக்கு தொண்டை பாதிப்பு வரலாம்.
வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :
- ஆஞ்சநேயர்
- குருவாயூரப்பன்
- திருக்கொள்ளிக்காடு