10 செப்டம்பர் 2025 முதல் 27 அக்டோபர் 2025 வரை
முருகனுக்கு விரதம் துவங்கும் முறை:
- முதல் நாளே வீடு பூஜை அறை சுத்தம் செய்யவும்.
- அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று எதற்கு விரதம் என்று சொல்லி ஆரம்பிக்கவும்.
- கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனில் வீட்டில் ஒரு பேப்பரில் வேண்டுதலை எழுதி முருகன் பாதத்தில் வைத்தும் விரதத்தை ஆரம்பிக்கலாம்.
- காலை எழுந்ததும் குளித்து முடித்து 7 மணிக்கு முன்னதாக முருகனுக்கு பூ போட்டு வழிபடவும்.
- காலையும் மாலையும் 2 நெய் தீபம் ஏற்றவும்.
- நெய்வேத்தியமாக ஒரு டம்ளர் பால், பழம், கற்கண்டு இவற்றில் எளிமையாக முடிந்தவற்றை வைத்து வழிபடலாம்.
- தீப, தூபம் காட்டி பூஜை செய்த பிறகு ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும் முடிந்தால் எழுதலாம்.
- உங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் மற்றும் சண்முக கவசம் தினமும் கேட்கலாம் படிக்கலாம்.
விரதத்தில் கடைபிடிக்க வேண்டியவை:
- தினமும் தலைக்கு குளிக்க தேவையில்லை செவ்வாய் வெள்ளி தலைக்கு குளித்தால் போதும்.
- அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு முடிந்தால் தினமும் தலைக்கு குளிக்கலாம்.
- இல்லறத்தில் இருந்தால் மறு நாள் வீடு சுத்தம் செய்து தலை குளித்து விரதத்தை தொடரவும்.
- வாரம் ஒரு முறை வீடு மற்றும் பூஜை அறை சுத்தம் செய்தால் போதும்.
- விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.
- வீட்டில் உள்ளவர்களுக்கு அசைவம் சமைத்து கொடுக்கலாம்.
- வீட்டில் அசைவம் சமைத்தால் அடுத்த நாள் வீடு சுத்தம் செய்து பூஜைகளை தொடரவும்.
- பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ளவர்களை தீபம் ஏற்ற சொல்லி பூஜை அறைக்கு செல்லாமல் வழிபடலாம்.
- அல்லது 48 நாள் விரதம் முடிந்து எத்தனை நாள் பூஜை செய்யவில்லையோ அத்தனை நாள் விரதம் ஆகவே இருக்கவும்.
- முதல் நாளும் முடியும் நாளும் மட்டும் ஒரு வேளை விரதம் இருந்தால் மிக சிறப்பு.
- எளிமையாக ஒருவேளை மட்டும் முருகனுக்கு வைக்கும் நெய்வேத்தியத்தை உண்டு விரதம் இருக்கலாம்.
- 48 நாள் விரதம் முடிந்த அடுத்த நாளே அசைவம் சாப்பிடக்கூடாது.
நெய்வேத்தியம்:
- பால், பழம், பாயாசம், சர்க்கரை பொங்கல், தேன் திணை மாவு, 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு இவற்றில் முடிந்தவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபடலாம்
விரதத்தின் பலன்கள்:
- வளர்பிறை சஷ்டி விரதம் செல்வம் பெருக, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய, சுப காரியம் நடக்க இருப்பது.
- தேய்பிறை சஷ்டி விரதம் கடன் துன்பம் நீங்க, பிரச்சினைகள் தீர இருக்கும் விரதம்.
- கஷ்டம் தீர கந்த சஷ்டி கவசம், நோய்கள் நீங்க சண்முக கவசம் படிக்கலாம் மற்றும் கேட்கலாம்.
- நிறைய சோதனைகள் வரும் அதை தாண்டி வைராக்கியமாக முழு அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும்.
- கர்ம வினைகளை குறைத்து முருகன் நமக்கு அருள் செய்வார் என்பது ஐதீகம்.
- 48 நாள் முடிந்து நினைத்துப் பார்க்க முடியாத அற்புதம் நடக்கும் கேட்டதற்கான வழியும் கிடைக்கும்.