அனைத்து கடவுளும் வணங்கக்கூடிய முதல் கடவுள் சிவன்.
“ஓம் சிவ சிவ ஓம்”இது பிரணவத்தில் ஆரம்பித்து பிரணவத்தில் முடியக்கூடிய மந்திரம்.
ஓம் என்பதற்கு பிரணவத்தின் அனைத்து சக்தியும் கிடைக்கும் என்று பொருள்.
இந்த மந்திரத்தை ஜெபிக்க எந்த கட்டுப்பாடும் இல்லை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபிக்க,
- கர்ம பிரச்சனைகள் தீரும்
- முழு சிவா அருள் கிடைக்கும்
- விதியை மாற்றக்கூடிய அற்புத மந்திரம்.
குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் ஓம் சிவ சிவ ஓம் என்றும், அதாவது இரு முறை தான் சிவ சிவ சொல்ல வேண்டும்.
ஆன்மீகம் மற்றும் பிரம்மச்சரியத்தில் உள்ளவர்கள் மட்டுமே,ஓம் சிவ சிவ சிவ ஓம் என்றும், அதாவது மூன்று முறை சிவ சிவ சிவ என்று குறிப்பிடலாம்.
சிவனின் முழு அருள் பெற ஒருவரி மந்திரம்:
- சிவமும் சக்தியும் சம அளவில் கலந்த அற்புத மந்திரம் தான் “ஓம் சிவ சிவ ஓம்” (சிவ சக்தி தத்துவம்).
- சிவ சிவ என்று ஜெபித்து வந்தால் பாவங்கள் மூட்டை மூட்டையாக இருந்தாலும் அழிந்து போகும்.இப்பிறவியில் மேன்மை பெற்று மீண்டும் பிறவா முக்தி நிலையை அடையவும் சிவகணமாக மாறவும் உதவும்.
- ஆன்மா – பரமாத்மா இரண்டின் அகிலத்தையும் குறிப்பது இந்த மந்திரம்.
மந்திரத்தின் அர்த்தம்:
- “ஓம்” என்பது பிரபஞ்சத்தின் ஒலி, அனைத்து மந்திரங்களுக்கும் சக்தி தரும் ஆதிசக்தி வடிவம்.
- “சிவ” : என்றால் சிவ தத்துவம், மன தூய்மை, ஆன்மீக பேரின்பத்தை குறிப்பது.
- “சிவ சிவ” : என இருமுறை வருவதற்கான அர்த்தம் பாவங்கள் நீங்கி பிறவி நிலையிலிருந்து ஆன்ம நிலைக்கு முக்தி கிடைக்கும் என்று பொருள்.
- “ஓம்” : மீண்டும் வருவது பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதை குறிக்கிறது.
மந்திரத்தின் பலன்கள்:
- மனதை தூய்மைப்படுத்தும் ஆன்ம தத்துவத்தை உணரச் செய்யும்.
- மன உறுதி மற்றும் மன அமைதி கிடைக்கும்.
- பாவங்களை அழிந்து முக்தி நிலையை அடைய செய்யும்.
- இல்லறம் மற்றும் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இருவருக்கும் ஜெபிக்க ஏற்ற மந்திரம்.
ஜெபிக்கும் முறை:
- “ஓம் சிவ சிவ ஓம்” என்ற மந்திரம் திருமூலரின் திருமந்திரம் இதை மனதார தொடர்ந்து சொல்லி பயிற்சி செய்யும்போது மன அமைதி, ஆன்மிக உயர்வு மற்றும் சிவபுண்ணியம் பெறலாம்.
- சிவசக்தி தத்துவமே குமரக்கடவுள் ஆறுமுகம் – ஆறு எழுத்துக்கள்.
- சிவசக்தி வடிவமே உலக தத்துவம், இதுவே லிங்க யோனி தத்துவம்.
- சிவனும் சக்தியும் இணைந்தால் தான் உலக இயக்கம்.
கிழமைகளும் ஜெபிப்பதன் பலன்களும்:
முறையாக ருத்ராட்சம் அணிந்து விரதம் இருந்து இந்த மந்திரத்தை பின்வரும் தினங்களில் ஜெபித்தால்,
- ஞாயிறு – பதவி உயர்வு கிடைக்கும்
- திங்கள் – வாழ்க்கை சிறக்கும்
- செவ்வாய் – நோய் தீரும்
- புதன் கல்வி – அறிவு பெருகும்
- வியாழன் – ஞானம் கிடைக்கும்
- வெள்ளி – பணம் பெருகும்
- சனிக்கிழமை – மனம் தெளிவடையும்
திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்து கொண்டு “ஓம் சிவ சிவ ஓம்” மந்திரத்தை ஜெபிக்க முழு சிவா அருள் கிடைக்கும், கர்ம பிரச்சனைகள் தீரும் மற்றும் விதியை மாற்றி அமைக்க கூடிய அற்புத மந்திரம் இது.
ஓம் சிவ சிவ ஓம்:
திருமூலரின் மூலமந்திரம் – ஓம்
திருமூலர் அருளிய மந்திரம் – சிவ சிவ
ஓம் — ஓரெழுத்து மந்திரம் (இரு முறை) — இரு எழுத்துக்கள்
சிவ — ஈரெழுத்து மந்திரம் (இரு முறை) — நான்கு எழுத்துக்கள்
இதை சம அளவில் சேர்ப்பதால் கிடைப்பதே “ஓம் சிவ சிவ ஓம்” ஆக மொத்தம் ஆறு எழுத்துக்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!