ஏழு நாட்களும் அணிய வேண்டிய அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் மற்றும் அணிய கூடாத நிறங்கள்
ஒவ்வொரு கிழமைக்கும் உரிய கோள்களுக்கான பிரத்யேக நிறங்களில் ஆடை அணிவது நன்மைகளை நடக்க செய்யும்.
ஒரு சிலர் அன்றைய தினம் அவர்களுக்கு உகந்த நிறம் எது என்பதை ராசி பலன் கேட்டு அந்த நிற ஆடை அணிவார்கள்.
அதேபோல் ஒரு சிலர் எந்த கிழமையில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்திற்கு உகந்த நிறத்தில் ஆடை அணிவார்கள்.
7 நாட்களுக்குரிய அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்:
- ஞாயிறு : சிவப்பு, செம்மஞ்சள், ஆரஞ்சு
- திங்கள் : வெள்ளை, சில்வர், வெளிர் நீலம்
- செவ்வாய் : சிவப்பு, பிங்க், ஆரஞ்சு
- புதன் : பச்சை, வெளிர் நீலம்
- வியாழன் : மஞ்சள், பொன்ன நிறம்
- வெள்ளி : இளஞ்சிவப்பு, வெள்ளை, கடல் நீலம்
- சனி : கருப்பு, கரு நீலம்
எந்த கிழமையில் எந்த நிற ஆடைகள் அணியக்கூடாது:
- ஞாயிறு : கருப்பு
- திங்கள் : சிவப்பு
- செவ்வாய் : பச்சை
- புதன் : வெள்ளை
- வியாழன் : கருப்பு
- வெள்ளி : ஆரஞ்சு
- சனி : வெள்ளை
வார நாட்களும் கிரகங்களும்:
- ஞாயிறு : சூரியன்
- திங்கள் : சந்திரன்
- செவ்வாய் : அங்காரகன்
- புதன் : புதன்
- வியாழன் : குரு
- வெள்ளி : சுக்கிரன்
- சனி : சனி
ராகு கேது நிழல் கிரகங்கள் இவற்றிற்கு ஸ்தானபலம் இல்லை.
7 நாட்கள் 7 நிறங்கள் அணிய வேண்டியது அணியக்கூடாது
ஏழு நாட்களுக்கு உரிய நிறங்கள் மற்றும் பலன்கள்:
வார நாட்களுக்கு ஏற்ற நிறங்களை நாம் அணிவதன் மூலம் அந்த நாட்களுக்குரிய கிரகத்தின் அருள் நமக்கு கிடைக்கப்பெற்று செய்யும் காரியங்களும் வெற்றி அடையும் என்பர்.
ஞாயிற்றுக்கிழமை:
- ஞாயிறு என்றால் சூரியன் என்று அர்த்தம்.
- இந்த நாள் முழுக்க சூரியனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.
- சிவப்பு, ஆரஞ்சு, செம்மஞ்சள் நிறம் அணிவதால் உற்சாகத்தையும் உறுதியையும் தரும்.
- சூரியன் வெற்றியையும் தன்னம்பிக்கையை தரும் கடவுள்.
- கடவுள் : சூரிய பகவான்
- அணியக்கூடிய நிறம் : சிவப்பு, ஆரஞ்சு, செம்மஞ்சள்
- அணியக்கூடாத நிறம் : கருப்பு
- பலன்கள் :மன உறுதியை மேம்படுத்தும், நோய் தொற்றுகளை தடுத்து ஆரோக்கியம் தரும்.
திங்கள்கிழமை:
- திங்கள் என்பது சந்திர பகவானை குறிப்பது.
- இந்த நாளில் சந்திரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.
- வெள்ளை நிற உடை அணிவதால் மன அமைதி கிடைக்கும்.
- சந்திரன் மனம் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடையவர்.
- இது சிவனுக்கு உரிய நாளாகவும் இருப்பதால் ஊதா நிறமும் சுபம் தரும்.
- கடவுள் : சந்திர பகவான்
- அணியக்கூடிய நிறம் : வெள்ளை, வெளிர் நீலம், சில்வர்
- அணியக்கூடாத நிறம் : சிவப்பு
- பலன்கள் :மன அழுத்தம் குறையும், குழப்பமான மனநிலை சரியாகும், மனம் அமைதி பெறும்.
செவ்வாய்க்கிழமை:
- செவ்வாயின் அதிபதியான அங்கரகனை வழிபட உகந்த நாள்.
- சிவப்பு உடை அணிவதால் அந்த நாளில் ஏற்படும் தடைகள் உடையும் தைரியம் அதிகரிக்கும்.
- கடவுள் : செவ்வாய் பகவான் (அங்காரகன்)
- அணியக்கூடிய நிறம் : சிவப்பு, ஆரஞ்சு, பிங்க், செம்மண் நிறம்
- அணியக்கூடாத நிறம் : பச்சை
- பலன்கள் :உடல் ஆரோக்கியம் மேம்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புகள் வரும், உறுதியான மனநிலை ஏற்படும்.
புதன்கிழமை:
- புதன்கிழமைக்கு அதிபதியான புதன் பகவானை வழிபட உகந்த நாள்.
- புதனின் ஆசி கிடைத்தால் மட்டுமே ஒருவரால் தொழிலில் வெற்றி பெற முடியும்.
- பணம், வியாபாரம், அறிவு, அதிர்ஷ்டம், தந்திரம் போன்றவற்றிற்கு அதிபதி புதன்.
- பச்சை நிறம் நல் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
- கடவுள் : புதன் பகவான்
- அணியக்கூடிய நிறம் : பச்சை, வெளிர் நீலம்
- அணியக்கூடாத நிறம் : வெள்ளை
- பலன்கள் :சிறந்த அறிவாற்றல் கிடைக்கும், செல்வ நிலை மேம்பாடு.
வியாழக்கிழமை:
- வியாழன் என்பது நவகிரக குரு வழிபாட்டிற்கு உகந்த நாள்.
- குரு ஆதிக்கம் மிகுந்த இந்நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பு.
- வியாழனுக்கு உகந்தது மஞ்சள் நிற உடைகளை அணிந்தால் வாழ்வில் மகிழ்ச்சியும் காரிய வெற்றியும் உண்டாகும்.
- கடவுள் : குரு பகவான்
- அணியக்கூடிய நிறம் : மஞ்சள், பொன் நிறம்
- அணியக்கூடாத நிறம் : கருப்பு
- பலன்கள் :கல்வி மேம்படும், பணவரவு அதிகரிக்கும், நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை:
- சுக்ரனின் ஆதிக்கக் கிழமை வெள்ளி.
- சுக்ர பகவான் அழகு கலை காதல் ஆகியவற்றுக்கான தெய்வம்.
- செல்வத்தின் கடவுளான ஸ்ரீ லட்சுமி தேவியை வழிபட உகந்த நாள்.
- சிவப்பு நிறம் லட்சுமி தேவியின் அருளைப் பெற உதவுகிறது.
- கடவுள் : சுக்ர பகவான் (மகாலட்சுமி)
- அணியக்கூடிய நிறம் : வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, கடல் நீலம்
- அணியக்கூடாத நிறம் : ஆரஞ்சு
- பலன்கள் :செல்வம் நிலை உயரும், காதல் வாழ்க்கை மேம்படும், கணவன்-மனைவி உறவில் அமைதி நிலவும்.
சனிக்கிழமை:
- சனிபகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள்.
- கருப்பு உடை அணிவதால் சனிபகவானின் தீவிரம் குறைந்து நல்ல அருள் கிடைக்கும்.
- இந்த நிறம் ஒரு நபருக்கு நீதி கிடைக்கவும் எதிர்ப்பினை குறைக்கவும் உதவுகிறது.
- சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கருப்பு நிற உடை அணிய கூடாது.
- கடவுள் : சனி பகவான்
- அணியக்கூடிய நிறம்: கருப்பு, நீலம், கருநீலம்
- அணியக்கூடாத நிறம் : வெள்ளை
- பலன்கள் :துன்பம் அகலும், பிரச்சினைகள் குறையும், சனி பகவானின் கருணையை பெறலாம்.