நம் இஷ்ட தெய்வத்தை கண்டுபிடிபது எப்படி மற்றும் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது பற்றியும் திடீரென நம் வாழ்வில் அதிகமா பண கஷ்டம் எதிர்பாராத தொழில் முடக்கம் வேலை இழப்பு ஏற்பட காரணம் என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த தெய்வத்தை நான் வழிபட வேண்டும்??
- நீங்கள் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டவுடன் யார் உங்களை அழைத்துச் செல்கிறார்களோ அதாவது யார் உங்களுக்கு காட்சி கொடுக்கிறார்களோ அவர்களே உங்கள் இஷ்ட தெய்வம்.
- எல்லோரும் சிவ பக்தன் ஆகிட முடியாது!
- எல்லோரும் முருக பக்தன் ஆகிட முடியாது!!
- கனவில் வந்து அழைக்கும் சம்பவங்களும் உண்டு, கனவில் பார்த்த அதே கோவில் அதே உருவம் நேரிலும் இருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமும் நடப்பதுண்டு….
- அதுவே உங்க இஷ்ட தெய்வம், அதுவே உங்கள் வழிபாட்டு தெய்வமும் கூட….
அவன் அனுமதி இன்றி ஓர் அணுவும் அசையாது
திடீரென தொழில் முடக்கம் அதிக பணக்கஷ்டம் வர காரணம் :
- நன்கு சென்று கொண்டிருந்த தொழில் திடீரென முடங்கிப் போகிறது.
- சாப்பிட கூட வழியில்லாத அளவிற்கு அதிக பண கஷ்டம் ஏற்படுகிறது என்றால் அந்த நேரத்தில் அமைதியாக இருங்கள்.
- ஏனெனில் உங்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் உயிரை காப்பாற்றவே உங்கள் குலதெய்வம் வருமானத்தை அதற்கு ஈடாக எடுத்துக் கொண்டு உயிரை காப்பாற்றிக் கொடுக்கிறது.
- அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல முயன்றாலும் நடக்காது.
- உயிர் தான் முக்கியம் நேரம் சரியான பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சியும் பண வரவும் கிட்டும் அனைத்தும் சரியாகும் குலதெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும்.