ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
- “ஆறுமுகம்” – முருகப்பெருமானின் ஆறு முகங்களை குறிப்பது
- “அருளிடும்” – முருகனின் அருளும் ஆசிர்வாதமும் பெற
- “அனுதினமும்” – தினமும் தொடர்ந்து சொல்வதால்
- “ஏறுமுகம்” – வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும்
அர்த்தம்:
- முருகப்பெருமானின் அருளை பெற தினமும் இதை தொடர்ந்து உச்சரித்தால் வாழ்க்கையில் சிரமங்களைக் கடந்து முன்னேற்றம் மற்றும் வெற்றியை கொடுக்கும் சக்திவாய்ந்த மந்திரம் ஆகும்.
மந்திரம் ஜெபிக்கும் முறை:
- காலை கண்விழித்ததும் படுக்கையில் அமர்ந்தபடி கண்கள் மூடிய நிலையில் இரு கைகளைக் கூப்பி முருகனை வேண்டி “ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்” என்ற மந்திரத்தை “9 முறை கூறி” பின் தினசரி வேலைகளை தொடர நாள் முழுவதும் நினைத்த காரியத்தில் வெற்றியும் மன அமைதியும் கிட்டும்.
முருகனின் மந்திரங்கள்:
- சரவணபவ – 6 எழுத்து மந்திரம்
- ஆறுமுகம் – 5 எழுத்து மந்திரம்
- கந்தன் – 4 எழுத்து மந்திரம்
- முருகா – 3 எழுத்து மந்திரம்
- வேல் – 2 எழுத்து மந்திரம்
- ௐ – 1 எழுத்து மந்திரம்
ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம் சகல உயிர்களுக்கும் ஒரு மந்திரம்.