முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி அமாவாசை திரும்ப பித்ருலோகத்திற்கு செல்லும் நாள் தை அமாவாசை.
ஆக, இந்த அமாவாசை தினத்தில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் அவசியம்.
ஆடி அமாவாசை அன்று ஏன் நம் முன்னோர்களை வழிபட வேண்டும்?
வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை:
- காலை எழுந்து குளித்து முடித்து ஒரு நிமிடம் முன்னோர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளவும்.
- ஒரு தாம்பூலம் வைத்து அதன் மேல் வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கு நடுவே சிறிது கருப்பு எள் வைத்து நீர் ஊற்றி முன்னோர்கள் இறந்தவர்கள் அனைவரின் பெயர்களையும் சொல்லி மூன்று முறை நீர் விடவும்.
- இந்த நீரை கால் படாத இடத்தில் அதாவது ஆறு குளம் ஏரி கிணறு போன்ற நீர் நிலைகளில் ஊற்றி விடவும்.
- என் முன்னோர்கள் அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- சாதத்தில் சிறிது தயிர் கருப்பு எள் கலந்து காக்கைக்கு வைக்க வேண்டும்.
- பசுவிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம், தெரு நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.
- குலதெய்வ வழிபாடு செய்வதும் நம்மால் இயன்றதை எளியவர்களுக்கு தானம் செய்வதும் அன்னதானம் கொடுப்பதும் சிறப்பு.
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பூஜை செய்யும் முறை:
- தெற்கு பார்த்தவாறு முன்னோர்கள் படத்தை வைத்து ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
- படம் இல்லாதவர்கள் ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றி வழிபடலாம்.
- முன்னோர்கள் படத்திற்கு துளசி மாலை அணிவித்து சாம்பிராணி போடவும்.
- வெற்றிலை பாக்கு இரண்டு வாழைப்பழம் சிறிது மல்லிகை பூ வைக்க வேண்டும்.
- நிறை சொம்பு நீர் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
- படையலுக்கு வாழைக்காய் உளுந்து வடை கண்டிப்பாக வைக்க வேண்டும்.
- விரதம் இருந்து வெள்ளை வேஷ்டி அணிந்து ஆண்கள் தான் பூஜை செய்ய வேண்டும்.
- காக்கைக்கு கிழக்கு திசை பார்த்து உணவு வைத்து பிறகு சிறிது நீர் விலவ வேண்டும்.
- அகத்திக்கீரை பசு மாட்டிற்கு தனமாக கொடுக்க வேண்டும்.
- மாலை ஆறு மணிக்கு மேல் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று ஒரு நெய் தீபம் முன்னோர்களை நினைத்து ஏற்ற வேண்டும்.
முன்னோர்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதது:
முன்னோர்கள் வீட்டிற்கு வருவதற்கான அறிகுறிகள்:
- வீட்டின் மேற்பகுதியை பார்த்து நாய்கள் குறைப்பது
- திடீரென விபூதி வாசனை வீட்டிற்குள் அதிகமாக வருவது
- காக்கைகள் கூட்டமாக வீட்டிற்கு வருவதுமனதிற்குள்
- தேவையில்லாத பதற்றம் வருவது
இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர்ந்தால் உங்கள் முன்னோர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம் அந்த சமயத்தில் குலதெய்வ பெயரை சொல்லி மூன்று முறை வேண்டிக் கொள்ளவும்.