தர்ப்பணம் செய்வதற்கும் முன்னோர்கள் வழிபாட்டிற்கும் உகந்த நாள் அமாவாசை.
நாம் தர்ப்பணம் கொடுப்பதால் நம் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.
வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை
அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதது:
- வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. நகம் வெட்டுதல் மூடி வெட்டுதல் செய்யக்கூடாது.
- அசைவம் சமைக்கக்கூடாது சாப்பிடக்கூடாது.
- முன்னோர்கள் பூஜையில் மணி அடிக்க கூடாது.
- எள் கடனாக வாங்கி தர்ப்பணம் செய்யக்கூடாது.
- வீடு பூஜை அறை அமாவாசை அன்று சுத்தம் செய்யக்கூடாது.
- தர்ப்பணத்திற்கு ராகு காலம் எமகண்டம் பார்க்க தேவையில்லை.
- படையல் போடும்போது ராகு காலம் எமகண்டமாக இருக்கக் கூடாது.
- நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் இடக்கூடாது.
- எலுமிச்சை அறுத்து நிலை வாசலில் வைத்திருந்தால் எடுத்து விட வேண்டும்.
- பூஜை அறையில் உள்ள விளக்கை முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றக்கூடாது.
- முன்னோர்கள் வழிபாடும் முடியும் வரை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய கூடாது.
- சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
- தந்தை உள்ள மகன்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
- பெண் பிள்ளைகள் பெற்றோருக்காக எள் தண்ணீர் இறைத்து பிண்டம் வைக்கக்கூடாது.
யார் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது?
அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டில் செய்ய வேண்டியது:
- குலதெய்வ வழிபாடு அவசியம், தானம் செய்ய வேண்டும்.
- மாலையில் ஆலயத்திற்கு சென்று ஆறு மணிக்கு மேல் ஒரு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
- முன்னோர்கள் படம் இல்லாதவர்கள் தெற்கு பார்த்து ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றி வழிபடலாம்.
- சுமங்கலி பெண்கள் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு தான் படையலுக்கு சமைக்க வேண்டும்.
- வாழைக்காய் கண்டிப்பாக சமைக்க வேண்டும்.
- படையலில் உளுந்து வடை, சர்க்கரை பொங்கல் வைக்க வேண்டும்.
- காகத்திற்கு கிழக்கு பார்த்தவாறு உணவு வைக்க வேண்டும்.
- காகத்திற்கு சாதம் வைத்து எடுத்த பிறகுதான் நாம் சாப்பிட வேண்டும்.
- பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம் தானமாக கொடுக்க வேண்டும்.
- தெரு நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.
- வயதானவர்கள் விரதம் இருக்க தேவையில்லை தானம் செய்து படையில் போட்டு வழிபட்டால் போதும்.
- பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தால் குளித்துவிட்டு படையலுக்கு சமைக்கலாம்.
- அமாவாசை அன்று இரவு ஒரு கைப்பிடி சாதம் ஆவது நாம் சாப்பிட வேண்டும்.