ஹோமம் என்பது அக்னியை (தீ) முன்னிறுத்தி செய்யப்படும் ஒரு சடங்கு வேள்வி அல்லது யாகம் ஆகும்.
ஹோமம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.
இதில் அக்னியில் நெய், தானியங்கள், மூலிகைகள் போன்ற பொருட்களை இட்டு கடவுளை வழிபடுவது சிறப்பு.
ஹோமத்தின் நோக்கம்:
ஹோமத்தின் முக்கிய நோக்கம் அக்னி பகவானை முன்னிறுத்தி உலக நன்மைக்காக கடவுளை வழிபாடு செய்வதும், நமது பாவங்களை நீக்கி புண்ணியத்தை அடைவதும் ஆகும்.
ஹோமத்தில் கலந்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்:
- தடைகள் விலகும்
- கஷ்டங்கள் நீங்கும்
- நினைத்தவை நடக்கும்
- தீய கர்ம வினைகள் நீங்கும்
- தோஷங்கள் பாவங்கள் நீங்கும்
- புண்ணியங்கள் நம்மை சேரும்
ஹோமத்தில் எரியும் தீயை பார்ப்பதால் கிடைக்கும் பலன்கள்:
ஹோம குண்டத்தில் எரியும் தீயை உற்று நோக்குவதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனம் ஒருநிலைப்படும் மனதிற்கு அமைதி கிடைக்கும் வேண்டியது நிறைவேறும்.
சில ஹோமங்களும் அதன் பயன்களும்:
- கணபதி ஹோமம் : தடைகள் விலகும்
- சண்டி ஹோமம் : தரித்திரம் நீங்கும்
- நவகிரக ஹோமம் : கிரக தோஷங்கள் நீங்கும்
- சுதர்சன ஹோமம் : நோய்கள் நீங்கும்
- தில ஹோமம் : பித்ரு தோஷம் நீங்கும்
- ருத்ர ஹோமம் : கர்ம வினைகள் நீங்கும்
- ஆயுஷ்ய ஹோமம் : நீண்ட ஆயுள் தரும்
- மிருத்யுஞ்சய ஹோமம் : விபத்து பயம் நீங்கும்
- லட்சுமி குபேர ஹோமம் : செல்வ வளம் பெருகும்
- புத்திர காமேஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியம் உண்டாகும்
- சுயம்வர பார்வதி ஹோமம் : பெண்களின் திருமணத்தடை நீங்கும்
- ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களின் திருமண தடை நீங்கும்
- ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்
- பிரத்யங்கிரா ஹோமம் : சர்பதோஷம் நீங்கும்
- கண் திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும்
- காலசர்ப்ப ஹோமம் : தொழில் முடக்கம் நீங்கும்
- சத்ரு சம்ஹார ஹோமம் : கடன் பிரச்சனை தீரும்