விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.

2025 – 2026 குரு பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

விருச்சிகம் 8 ல் குரு (12-2-4) ஆம் இடம் குரு பார்வை – அஷ்டமஸ்தானம் வருமானம் சிறப்பு பேராசை வேண்டாம் தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கவும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் :

  • 8 ல் குரு (12-2-4) பார்வை பலன் – அஷ்டமஸ்தானம்.
  • எப்பொழுதும் பிரச்சனை, தியாகம் செய்து வாழும் ராசி விருச்சகம்.
  • 8 ல் குரு ஸ்தான பலம் சரியில்லை, பார்வை பலத்தால் பொருளாதாரத்திற்கு கஷ்டம் வராது.
  • பேராசை வேண்டாம் இழப்பு வந்து சேரும், ஆசையை தூண்டும்.
  • நிதானம் வேண்டும், வழக்கமான வேலைகளை மட்டும் பார்க்கவும்.
  • வீடு மனை வாகனம் யோகம் உண்டு.
  • ஆரோக்கியம் பரவாயில்லை, மருத்துவ செலவுகள் குறையும்.
  • நன்கு தூக்கம் வரும், தாய் உடல் நிலை சரியாகும்.
  • சொத்தில் வில்லங்கம், வம்பு வழக்கு இருந்தால் சரியாகும்.
  • பொருள் சேரும், அவமானங்கள் சரியாகும், ஆயுள் பலம் கூடும்.
  • திருமண யோகம் வாகனம் வீடு கட்டுதல் குழந்தைகள் வெளிநாடு யோகம் உண்டு.
  • எதையாவது நினைத்து சிரமத்திற்கு உள்ளாகும் ராசி.
  • வருமானத்திற்கு குறைவில்லை பேச்சுக்கு மரியாதை உண்டு.
  • பிள்ளைகள் படிப்பு தொழில் வேலை ஆரோக்கியம் கவனம்.
  • பிள்ளைகள் தவறான பழக்கத்திற்கு போக வாய்ப்பு உண்டு.
  • பிள்ளைகள் வாகனத்தில் கவனம், படிப்பு செலவு இரட்டிட்டிப்பாகும்.
  • நீங்கள் சொன்னது பலிக்கும் எதிர்மறையாக பேச வேண்டாம்.
  • கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு வாய்ப்பு உண்டு.
  • வேலையில் அதிக உழைப்பு சிரமம் இருக்கும்.
  • உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
  • சுப காரியம் செய்யும் போது சுய ஜாதகத்தை பார்த்துக் கொள்ளவும்.
  • மங்கள காரியங்கள் தடைப்பட வாய்ப்பு உண்டு.
  • நீங்கள் சொல்லாத விஷயத்தை சொன்னதாக பேச்சு வரும் கவனம்.
  • குழந்தைகள் மூலம் சங்கடங்கள் வரும் கவனம்.
  • வாழ்க்கைத் துணை மூலம் நல்லது நடக்கும்.
  • புது முதலீடு இடமாற்றம் வேலை மாற்றம் உண்டு.
  • ஆவணங்கள் காணாமல் போக வாய்ப்பு உண்டு கவனம்.
  • மாணவர்கள் அதிகமாக படிக்க வேண்டும் பொழுது தான் வெற்றி.
  • செலவு அதிகம் வரவும் அதிகம்.

கவனமாக இருக்க வேண்டிய பகுதி :

  • வாயு பிடிப்பு பிரச்சனை
  • கர்ப்பப்பை தொந்தரவு

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • பட்டீஸ்வரம் துர்க்கை
  • இராமானுஜர்
  • திருச்செந்தூர் முருகன்
  • தான்தோன்றி பெருமாள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *