- வாசலில் விளக்கு ஏற்றும் பழக்கம் உள்ளவர்கள் முதலில் வாசலில் விளக்கு ஏற்றிய பிறகு தான் வீட்டின் உள்ளே விளக்கு ஏற்ற வேண்டும்.
- வீட்டில் தினசரி குறைந்தது இரண்டு விளக்கு ஏற்றுவது சிறப்பு.
- ஒரு மண் அகல் விளக்கு கண்டிப்பாக ஏற்ற வேண்டும்.
- விளக்கு ஏற்றும் போது எண்ணெய் திரி இரண்டும் தூய்மையாக இருக்க வேண்டும்.
- விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது கைகளால் திரியை தூண்டக்கூடாது.
- விளக்கு தூண்டி மரக்குச்சி பூ காம்புகளை பயன்படுத்தி மட்டுமே விளக்கை தூண்ட வேண்டும்.
- நீண்ட காலமாக ஒரே திரியை பயன்படுத்தக் கூடாது.
- விளக்கு கருப்பு அடைந்து பச்சை பிசுக்குடன் இருக்கக்கூடாது.
- செவ்வாய் புதன் வெள்ளி கிழமைகளில் விளக்கை தேய்த்து கழுவ கூடாது.
- பழைய எண்ணெய் மற்றும் பிசுக்குகளை சுத்தமான துணியால் துடைத்து வீட்டு தீபம் ஏற்றலாம்.
- தினமும் சூரிய உதயத்திற்கு முன்பாகவும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் விளக்கு ஏற்ற வேண்டும்.
- வீட்டில் குறைந்தது 30 நிமிடங்களாவது இருவேளையும் விளக்கு எரிவது நல்லது.
- கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றை விளக்கு ஏற்ற பயன்படுத்த கூடாது.
- பூ வைத்தும் திரியை உள் பக்கமாக தள்ளியும் தீபத்தை மலையேற்றலாம், கையால் வீசியும் வாயால் ஊதியும் மலையற்றக்கூடாது.
- தினமும் திரி மாற்ற தேவையில்லை நுனியில் இருக்கும் கருப்பை நீக்கி அதே திரியை மறுநாள் ஏற்றலாம்.
- ஒரு விளக்கில் எரிந்த எண்ணெயை மற்றொரு விளக்கில் ஊற்றக்கூடாது.
- விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது விளக்கில் உள்ள தூசியை கையால் எடுக்கக் கூடாது.
- ஆண்கள் விளக்கு ஏற்றலாம் தவறில்லை ஆனால் தீபத்தை மலையற்றக்கூடாது.
Posted inDivine Tamil