சந்திரனின் சொந்த வீட்டில் சூரியன் (கடக ராசியில்) ஒரு மாத காலம் இருப்பது ஆடி மாதத்தில் தான்.
சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருப்பது ஆடி அமாவாசையான வருடத்தின் இந்த ஒரு நாள் மட்டும் தான்.
ஆடி அமாவாசை அன்று சிவனும் பார்வதியும் இணைந்து இருப்பதாக அர்த்தம்.
தர்ப்பணம் செய்வதற்கும் முன்னோர்கள் வழிபாட்டிற்கும் உகந்த நாள் அமாவாசை.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்:
- ஆடி அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் அவசியம்.
- இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அந்த ஆண்டிற்கு தேவையான உணவு நீர் அனைத்தும் அவர்களுக்கு கிடைப்பதாக ஐதீகம்.
- முன்னோர்கள் வேறு பிறவி எடுத்திருந்தால் அதிலும் நன்றாக இருப்பார்கள்.
- பித்ருகளுக்கு ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதால் நம் வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாக்கும்.
- நாம் தர்ப்பணம் கொடுப்பதால் நம் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.
- பித்ருகளையும் குலதெய்வத்தையும் வழிபடும் வீட்டில் தான் அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும்.
- தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் கர்ம வினைகளும் விலகிவிடும்.
- நம் துன்பங்கள் வறுமை நீங்கி சந்ததிகள் பெருகும்.
- நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு முடியவில்லை எனில் வீட்டிலும் செய்யலாம்.
முன்னோர்கள் வீட்டிற்கு வருவதற்கான அறிகுறிகள்
ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
- நாம் வருவதற்கு காரணமாக இருந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய நாள் அமாவாசை தர்ப்பணம் செய்வது.
- இறந்தவர்களின் திதி அன்றும் வருடம் ஒருமுறை செய்யலாம்.
- பாவ புண்ணிய ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணம் நல்வழி காட்டும்.
யார் யார் தர்ப்பணம் கொடுக்கலாம்?
- அப்பா இல்லை என்றால் ஆண் பிள்ளை தர்ப்பணம் கொடுக்கலாம்.
- அம்மா அப்பா இல்லை என்றால் ஆண் பிள்ளை தர்ப்பணம் கொடுக்கலாம்.
- அம்மா இல்லை என்றால் அப்பா தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
- மகன் அம்மாவுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யக்கூடாது.
- ஒரு ஆணின் குழந்தைகள், மனைவி இருந்துவிட்டால் தர்ப்பணம் கொடுக்கலாம்.
- இரண்டு மூன்று அண்ணன் தம்பிகள் இருந்தால் அவர்கள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ தர்ப்பணம் கொடுக்கலாம்.
- கணவனை இழந்த பெண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
- தர்ப்பணம் கொடுக்கும் வரை ஆண்கள் கண்டிப்பாக விரதமாக இருக்க வேண்டும்.
யார் யார் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது?
- தந்தை உள்ள மகன்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
- சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
- பெண் பிள்ளைகள் பெற்றோருக்காக எள் தண்ணீர் இறைத்து பிண்டம் வைக்கக்கூடாது.
- பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தால் ஒரு வருடம் முடிந்து திவசம் கொடுக்கும் போது அடுத்த பிறவி எடுக்கும் வரை அவர்களுக்கு தேவையானதை செய்து விடுவார்கள்.
- பெண்பிள்ளைகள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது தானம் கொடுப்பது வீட்டில் படையல் போட்டு வணங்குவது போதுமானது.