முருகனிடம் அரை நிமிடம் இப்படி கேளுங்கள்

உள்ளம் உருக உண்மையான பக்தியோடு உள் அன்போடு

முருகனிடம் அரை நிமிடம் இப்படி கேளுங்கள்

  • ‌அப்பனே முருகா நீ மட்டும் போதும்
  • ‌நீ பார்த்துக் கொடுப்பது எனக்கு சிறப்பானது
  • ‌என்னை உன் தொண்டனாக ஏற்றுக்கொள்
  • ‌உன் திருவடி நிழலில் எனக்கு இடம் கொடு
  • ‌பட்டது போதும் இனி துயரம் வேண்டாம்
  • ‌என் வாழ்க்கையை நல்ல வாழ்க்கையாக மாற்று.
  • ‌வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிடைக்க செய்.
  • ‌தீயவற்றை நீக்கி நல்ல தகுதியை கொடு.
  • ‌சகல செல்வ யோகத்தோடு வாழவை முருகா.

முருகனிடம் மனதார கேளுங்கள்

  • நினைத்தவர்க்கு நினைத்தவற்றை கொடுக்கும் வல்லமை பெற்றவன் முருகன்.
  • இவ்வாறு கேட்க நாம் கேட்பதை விட அதிகமாக 12 கரங்களால் வாரிக் கொடுக்கும் வள்ளல் முருகன்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

முருகனின் தொண்டனாக திருப்புகழ்

“சரணகாம லாலயத்தை அரை நிமிட” திருப்புகழ் 216 சுவாமிமலை.

முருகனின் தொண்டனாக இந்த திருப்புகழை தினமும் ஒரு முறை படிக்கவும்.

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க …… அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப …… மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த …… மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் …… முருகோனே.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *