குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.
2025 – 2026 குரு பெயர்ச்சியில் மிதுன ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
மிதுனம் 1 ல் குரு (5-7-9) ஆம் இடம் குரு பார்வை – மனதில் தெளிவு வேண்டும் அலைச்சலும் அதிர்ஷ்டமும் உண்டு.
மிதுன ராசிக்கான பலன்கள்:
- ராசியில் குரு (5-7-9) பார்வை பலன் – மனதில் தெளிவு.
- ஜென்ம குரு ஸ்தானம் சிறப்பில்லை பாதக அதிபதி.
- குடும்பத்தோடு நேரம் செலவழிக்க விடாது.
- பலமுறை முயற்சி செய்தால் மட்டுமே காரியம் வெற்றி ஆகும்.
- அலைச்சல் மன உளைச்சலை உண்டாக்கும்.
- 3 ஆம் இடத்தில் கேது வருவதால் இவை அனைத்தும் சரியாகும்.
- கணவன் மனைவி ஒற்றுமை இல்லையெனில் கஷ்டப்படும் காலம்.
- பொருளாதாரத்தில் கஷ்டம் வராது.
- கஷ்டப்பட்டால் மட்டுமே வருமானம் சிறக்கும்.
- முயற்சி கடுமையாக இருந்தால் திருமணம் கைகூடும்.
- பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும்.
- சொந்தங்கள் உறவுகளிடத்தில் பொறுமையாக இருப்பது நல்லது.
- தூக்கம் சாப்பாடு நேரத்திருக்கு இருக்க வேண்டும்.
- பிள்ளைகள் படிப்பு தொழில் வேலையில் உள்ள சிக்கல் தீரும்.
- அவசொல் போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிடைக்கும்.
- மாணவர்களுக்கு கூடா நட்பு கேடாய் முடியும்.
- கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.
- அப்பாவிடம் இருந்த மனக்கசப்பு சரியாகும்.
- இடம் வீடு மனை தொழில் வேலை மாற்றம் அற்புதமாக இருக்கும்.
- தெய்வீக காரியம் நிறைய செய்யும் காலம்.
- 2 ஆம் குழந்தை யோகம் உண்டு.
- வெளிநாடு யோகம், உயர் கல்வி அரசு வேலை வாய்ப்பு உண்டு.
கவனமாக இருக்க வேண்டிய பகுதி :
- இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வர வாய்ப்பு உண்டு கவனம்.
வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :
- ஆலங்குடி குரு
- உலகளந்த பெருமாள்
- வைத்தீஸ்வரன் கோயில்