பிரதோஷமும் விரத வழிபாடு முறையும் அதன் பலன்களும்

பிரதோஷம் என்ற சொல்லுக்கு “தோஷம் நீங்கும் நேரம்” என்று பொருள், பாவம் தோஷத்தை தொலைத்துக் கொள்ளும் ஒரு வகை வழிபாடு பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ நேரம் :

பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதி (13-ம் நாள்) மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ள நேரம்.

இந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன்கள் :

இந்த கிழமைகளில் வரும் பிரதோஷங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்.

  • ஞாயிறு : தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும்
  • திங்கள் : மனநிம்மதி கிடைக்கும்
  • செவ்வாய் : கடன், பித்ரு தோஷம் விலகும்
  • புதன் : கல்வி கலைகள் சிறக்கும்
  • வியாழன் : கிரக தோஷங்கள் குறையும்
  • வெள்ளி : சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்
  • சனி : பஞ்சமா பாவங்கள் நீங்கும்

பிரதோஷத்தின் சிறப்புகள் :

  • பிரதோஷ காலத்தில் சிவபெருமான் ஆலகால விஷத்தைக் குடித்து உலகத்தை காத்தருளினார்.
  • பிரதோஷ காலத்தில் விரதமிருந்து சிவனை வழிபடுவதால் வறுமை, பயம், பாவங்கள் அகலும்.
  • பிரதோஷ காலத்தில் விரதம் இருப்பது நோய்கள் மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உதவும்.
  • சனி பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபடுவது சனி தோஷத்தையும் போக்கும். 
  • பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதாக ஐதீகம்.
  • பிரதோஷ நேரத்தில் ‘நமசிவாய’ மந்திரம் ஜெபிப்பது முன்னோர்களின் பஞ்சமா பாதகங்களை நீக்கும்.
  • நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவன் நடனம் புரிவதாக ஐதீகம், எனவே நந்தியை வழிபடுவது சிறப்பு.
  • நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு தானம் செய்யலாம் மிக மிக சிறப்பு.

வீட்டில் பிரதோஷம் வழிபாடு செய்யும் முறை :

பிறருக்கு ஏற்படும் கஷ்டம் தோஷம் நீக்க சிவபெருமான் அருள் பாலிக்கும் காலம் பிரதோஷம்.

  • காலை எழுந்து நீராடி விட்டு சிவபெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி வழிபடவும்.
  • முடிந்தவர்கள் முழு விரதம் அல்லது பால் பழம் விரதம் இருக்கலாம்.
  • சிவபுராணம் தேவாரம் திருவாசகம் கேட்கலாம் படிக்கலாம்.
  • மாலை 04:30 முதல் 06:00 மணி வரை பிரதோஷ நேரம்.
  • லிங்கம் இருந்தால் பால் தேன் தயிர் சந்தனம் திருநீறு அபிஷேகம் செய்யலாம்.
  • சிவபெருமான் படம் வைத்திருப்பவர்கள் வில்வ இலை சாற்றி வழிபடலாம்.
  • நெய்வேத்தியம் : அவல் சர்க்கரை, பால், 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, தயிர் சாதம், பொங்கல் இதில் முடிந்தவற்றை வைக்கலாம்.
  • ஒரு நெய் தீபம் ஏற்றி, தீப தூப ஆராதனைகுப் பிறகு 6.15 மணிக்கு மேல் விரதம் இருப்பவர்கள் நெய்வேத்தியம் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவும்.
  • விரதம் இல்லாதவர்களும் இதே போல் வீட்டில் வழிபாடு செய்யலாம் முழு சிவ அருள் கிட்டும்.
  • வேலைக்குச் செல்பவர்கள் மாலை 4.30 முதல் 6 மணி வரை ஓம் சிவாய நமக என்ற நாமத்தை மனதார சொன்னால் போதும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *