எந்த தெய்வத்தை வழிபடுவதால் என்ன பலன்

எந்த தெய்வத்தை வழிபடுவது என்பது முக்கியமல்ல எப்படிப் பிரார்த்திக்கிறோம், மனம் எவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்பதே முக்கியம்.

ஒவ்வொரு தெய்வத்தின் பின்னாலும் ஒரு தத்துவம் சக்தி வடிவம் உள்ளது.

இறை வழிபாடும் பலன்களும்:

  • விநாயகர் : இடையூறுகள் நீங்க
  • முருகன் : திருமணத்தடை நீங்க
  • லட்சுமி : செல்வ வளம் பெருக
  • சரஸ்வதி : கல்வி கலைகளில் சிறக்க
  • சிவன் : பாவங்கள் நீங்க
  • பெருமாள் : தொழில் சிறக்க
  • ஆஞ்சநேயர் : தைரியம் உண்டாக
  • தன்வந்திரி : நோய்கள் நீங்க
  • துர்க்கை : சத்ரு பயம் நீங்க
  • சந்தான லட்சுமி : புத்திர பாக்கியம் பெற
  • கஜலட்சுமி : புதிய தொழில் துவங்க
  • ருத்ரன் : ஆயுள் ஆரோக்கியம் பெறுக
  • அன்னபூரணி : உணவு கஷ்டம் நீங்க
  • ஐயப்பன் : சனி தோஷம் நீங்க
  • நரசிம்மர் : கடன் தொல்லை நீங்க
  • தட்சிணாமூர்த்தி : குரு தோஷம் நீங்க
  • தான்யலட்சுமி : விவசாயம் செழிக்க
  • மங்கள கௌரி : மாங்கல்யம் நிலைக்க
  • மாரியம்மன் : துன்பங்கள் நீங்க
  • காளி : பில்லி சூனியம் செய்வினை விலக
  • ராகு கேது நவக்கிரகங்கள் : கர்ம சமநிலை அடையும்

குலதெய்வத்தை வழிபடுவது அனைத்து நன்மைகளையும் தரும்

உங்களுக்கு ஏற்ற தெய்வத்தை எப்படி தேர்ந்தெடுப்பது?

  • உங்கள் மனதை ஈர்க்கும் ஒரு தெய்வத்தைத் தேர்ந்தெடுங்கள்.
  • தினசரி ஒரு சிறிய நேரம் பிரார்த்தனை அல்லது தியானம் செய்யுங்கள்.
  • நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் இருக்க வேண்டும்.
  • எந்த தெய்வமாக இருந்தாலும் சத்தியம், கருணை, நேர்மை மனத்தில் இருக்க வேண்டும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *