அபிஷேகம் என்பது விக்கிரகங்களுக்கு சக்தியை புதுப்பிக்க முறைப்படி செய்யும் ஒரு சடங்கு.
அபிஷேகம் என்றால் என்ன ?
இயங்கும் இறை சக்தியை குளிர்விக்க கோவில்களிலும் வீட்டிலும் உள்ள சிலைகளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
திருமுழுக்கு என்று தீந்தமிழில் கூறப்படும் அபிஷேகத்துக்கு ஆரம்பத்தில் நம் முன்னோர் 26 வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள் தற்போது அது 16-ஆக குறைந்துவிட்டது.
எந்த வகை அபிஷேகமும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று ஆகம விதி உள்ளது.
ஆனால், சில ஆலயங்களில் 48 நிமிடங்கள் வரை அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
சில அபிஷேக பொருட்களும் அதன் பலன்களும் :
- தண்ணீர் : மன அமைதி
- பால் : நீண்ட ஆயுள்
- தேன் : துன்பம் நீங்கும்
- தயிர் : மகப்பேறு தரும்
- நெய் : நோய்கள் தீர்க்கும்
- இளநீர் : இல்லம் காக்கும்
- மஞ்சள் : கடன் நிவர்த்தி
- சந்தனம் : சௌபாக்கியம் தரும்
- குங்குமம் : மங்களம் கொடுக்கும்
- திருநீறு : தொழிலை வளர்க்கும்
- திருமஞ்சனம் : தேக சுகம் தரும்
- மாம்பழச்சாறு : எம பயம் நீக்கும்
- கரும்புச்சாறு : ஆரோக்கியம் தரும்
- பஞ்சாமிர்தம் : பயத்தை போக்கும்
- மூலிகை நீர் : முக்தி அளிக்கும்
- வாசனை நீர் : வைராக்கியம் தரும்
- அரிசி மாவு : அபயம் அளிக்கும்
- பஞ்சகவ்யம் : பாவத்தை போக்கும்
- எலுமிச்சைபழம் : பல வினை தீர்க்கும்
- வாழைப்பழம் : பயிர் செழிக்கும்
- மாதுளைபழம் : கோபத்தை நீக்கும்
- நல்லெண்ணெய் : ஞானம் கொடுக்கும்
- பச்சைக் கற்பூரம் : நல்வாழ்வு தரும்
- மா பொடி : அரசு வேலை பெற
- பன்னீர் : சரும நோய் நீங்கும்
- வஸ்திரம் : ராஜயோகம் தரும்
- பூக்கள் : குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்
- கஸ்தூரி மஞ்சள் : வெற்றியை உண்டாக்கும்
- சர்க்கரை : பகை நீக்கும் எதிரிகளை அழிக்கும்
- தேங்காய் துருவல் : அரசு உரிமை பெற்றுத்தரும்
- கொழிஞ்சி சாறு : சோகத்தை போக்கும்
- திராட்சை : திட சரீரம் தரும்
- தமரத்தம்பழம் : பூமி லாபத்தை தரும்
- நார்த்தம்பழம் : நல்ல புத்தி தரும்
- சாத்துக்குடி : துயரம் நீக்கும்
- வாழைப்பழம் : பயிர் செழிக்கும்
- மாதுளைபழம் : கோபத்தை நீக்கும்
- பலாப்பழம் : உலக வசியம் உண்டாகும்
- நாவல் பழம் : மனோபலம் உண்டாகும்
- பேரிச்சை : சத்துருக்கள் இல்லாமல் போக்கும்
- நவரத்தின ஜலம் : வீடு மனை யோகம் கிட்டும்
- கோரோசனை : ஜெபம் சித்தியாகும்
- வலம்புரி சங்கு தீர்த்தம் : தீ வினையை நீக்கும்
- சொர்ண அபிஷேகம் : வைராக்கியத்தை தரும்
- சகஸ்ரதாரை : லாபத்தை பெற்று தரும்
- கும்ப நீர் : அஸ்வமேத யாகம் செய்த பலனை தரும்
- அன்னாபிஷேகம் : ஆயுள் ஆரோக்கியம் தேக அபிவிருத்தி உண்டாகும்
27 நட்சத்திர அன்பர்களும் கடவுளுக்கு கொடுக்க வேண்டிய அபிஷேக பொருட்கள் :
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், அதன் அதிதேவதைக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சாமியின் திருவுருவத்திற்கு அபிஷேகம் செய்யும் போது, சுத்தமான பொருட்களையும், புனித நீரையும் பயன்படுத்த வேண்டும்.
27 நட்சத்திரங்களைச் சேர்ந்த அன்பர்கள் கீழ்கண்ட பொருள்களை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுக்கலாம்.
- அஸ்வினி : சுகந்த தைலம்
- பரணி : அரிசிமாவுப்பொடி
- கார்த்திகை : நெல்லிப்பொடி
- ரோகினி : மஞ்சள் பொடி
- மிருகசீரிடம் : திரவியப்பொடி
- திருவாதிரை : பசு நெய், பால், தயிர்
- புனர்பூசம் : பஞ்சாமிர்தம்
- பூசம் : மா, பலா மற்றும் வாழை
- ஆயில்யம் : புனுகு, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம்
- மகம் : மாம்பொடி, நெல்லிப்பொடி
- பூரம் : எண்ணெய், அபிஷேகப்பொடி
- உத்திரம் : அபிஷேக நீரில் சேர்க்க வில்வம், தர்ப்பை கொடுக்கலாம்
- அஸ்தம் : தேன்
- சித்திரை : கரும்புச்சாறு
- சுவாதி : அனைத்து பழச்சாறு(எலுமிச்சை, நார்த்தம், கொழிஞ்சி, மாதுளம் பழச்சாறு)
- விசாகம் : இளநீர்
- அனுஷம் : அன்னாபிஷேகம்(அன்னாபிஷேகம் செய்ய அன்னம் கொடுக்கலாம்)
- கேட்டை : விபூதி மூலம் : சந்தனம்
- பூராடம் : சுகந்த திரவியங்கள்
- உத்திராடம் : தாராபிஷேகம் (தாராபிஷேகம் செய்ய பாத்திரம் வாங்கி கொடுக்கலாம்)
- திருவோணம் : தேன்
- அவிட்டம் : சங்காபிஷேகம்
- சதயம் : பன்னீர்
- பூரட்டாதி : சொர்ணாபிஷேகம்(சொர்ணாபிஷேகம் செய்ய நகைகள் கொடுத்து வாங்கலாம்)
- உத்திரட்டாதி : குங்குமப்பூ, மலர்கள்
- ரேவதி : ஸ்நபனம் செய்யலாம்(ஸ்நபனம் என்பது ஐந்து வகையான புண்ணிய தீர்த்தம்)
குறிப்பாக சிவன் கோயில்களுக்கு பிரதோஷ காலத்தில் கொடுப்பதனால் தங்கள் வேண்டுதல்கள்யாவும் நிறைவேறும்.
27 நட்சத்திரக்காரர்களுமே எந்தக் கடவுளுக்கு வேண்டுமானாலும் அபிஷேகத்திற்கு விபூதியை கொடுக்கலாம் என்பது சிறப்பு.